முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பீஸ்ட் படம் பற்றி வெளியாகும் அடுத்த அதிரடி அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் | Beast update

 Beast First Single Update Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். புத்தாண்டு விருந்தாக இந்த படம் ஏப்ரல் ரிலீஸ் என போஸ்டர் வெளியானது. இதனையடுத்து இந்த பொங்கலுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாக உள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

நடிகை ஜெயலலிதா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா...

  1965ஆம் ஆண்டு சி.வி. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெயலலிதா. இதனை தொடர்ந்து இரண்டாவது படமே எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இப்படத்தின் வெற்றிக்கு பின், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த இவர், 1982ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கினார். சினிமாவின் உச்சத்தில் பல புகழை சந்தித்த ஜெயலலிதா, அரசியலிலும் மக்கள் செல்வாக்கின் மூலம் 5 முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகையாக முதன் முதலில் வாங்கி சம்பளம் ரூ. 3,000 தானாம். பி.ஆர்.பந்துலு இயக்கிய 'சின்னட கொம்பே’ எனும் கன்னட படத்திற்காக ரூ.3,000 ஜெயலலிதாவுக்கு சம்பளமாக வழங்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

வலிமை படத்தின் சென்சார் கட்.. முக்கிய காட்சிகளை நீக்கிய தணிக்கைக்குழு

  அஜித் நடிப்பில் எதிர்பார்ப்புக்குரிய படமாக வலிமை உருவாகியுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13ஆம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் 50% சதவீதம் இருக்கைகளோடு தான் இயங்கும் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து, வலிமை வெளிவருமா என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து இதுவரை எந்தஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், படம் சொன்ன தேதியில் வெளிவரும் என்று சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்நிலையில், வலிமை படத்தில் இருந்து சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் என்னென்ன என்று குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வலிமை படத்திலிருந்து சில கெட்ட வார்த்தைகளையும், வன்முறை சம்மந்தப்பட்ட முக்கிய காட்சி ஒன்றையும் தணிக்கை குழு நீக்கியுள்ளதாம். அதுமட்மின்றி, மிருகங்கள் வரும் காட்சிகளையும், போதை பொருள் பயன்படுத்தும் காட்சியையும் நீக்கியுள்ளார்களாம். மேலும், முக்கியமாக வலிமை படத்தில் இடம்பெற்று இருந்த ' கடவுள் தான் நிஜ சாத்தான்' என்ற வசனத்தையும் தணிக்கைக்குழு மியூட் செய்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சிறு வயது புகைப்படம்.. இதுவரை பலரும் பார்க்காத ஒன்று

  ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ந்து பல படங்களின் தனது இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து உலகளவில் பிரபலமாகியுள்ளார். இவர் இசையில் தற்போது பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் கூட, இவரின் மூத்த மகள் கதீஜாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்தநாள் என்பதினால், அவருடைய அறிய புகைப்படங்கள் பல சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ரஹ்மானின் 9 வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால். ரஹ்மான் தனது 9 வயதில் தான், தனது முதல் ட்யூன் கம்போஸ் செய்தாராம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது..   

Breaking: Valimai Movie Postponed | Ajithkumar | H.Vinoth | BooneyKapoor | valimai update | கொரோனா 3-வது அலை | வலிமை ரிலீஸ் தேதியில் மாற்றம்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலை பரவல் தீவிரமாகி உள்ளதால் வட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் தியேட்டர்களை இரவில் மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இந்தி, தெலுங்கு படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருவதாக இருந்த ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீசை தள்ளி வைத்து இருப்பதாக அறிவித்து உள்ளனர்.