முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

'மாறன்' பட ட்ரைலர்: பத்திரிகையாளராக மிரட்டும் தனுஷ்| Maaran Trailer

சமீபத்திய இடுகைகள்

Pushpa OTT Release : ட்ரெண்டாகும் Pushpa .. மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்...

  இன்று இரவு 8 மணி முதல் புஷ்பா OTTயில் கலக்கவுள்ளது. இது குறித்து PushpaOnPrimeFromToday என்னும் ஹேஸ் டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்துள்ள படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்...  அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.   இப்படத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.  இந்த பாடல் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படம்...

இணையத்தில் லீக்கான Beast பட காட்சியின் புகைப்படம் !

  தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் பெரிய வரவேற்பை பெற்று 100 மில்லியனுக்கு அதிகமாக யூடியூப்பில் பார்வைகளை குவித்துள்ளது. இந்நிலையில் தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் பீஸ்ட் பட காட்சியின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த புகைப்படம் டப்பிங்கின் போது எடுக்கப்பட்டது போல தான் உள்ளது. மேலும் ரசிகர்களிடையே பரவி வரும் அந்த புகைப்படத்தில் விஜய் போன்னில் பேசிக்கொண்டு இருக்கிறார். அவரை சுற்றி குதிரைகள் உள்ளன, அதை பார்க்கும் போது ஜார்ஜியா லொகேஷன் போல் தான் உள்ளது. 

ரிலீசுக்கு தயாராகும் பீஸ்ட்...வெளியான அசத்தல் அப்டேட்

  அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான விஜய்யின் பீஸ்ட் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறதாம். இது பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல், ஊரடங்கு காரணமாக ஜனவரியில் ரிலீஸ் செய்ய முடியாமல் பீஸ்ட் உள்ளிட்ட பல படங்கள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரிலீசை அறிவித்து வருகின்றன. இதனால் பீஸ்ட் படத்தை எதிர்பார்த்திருக்கும் விஜய் ரசிகர்கள், அது பற்றி எந்த அப்டேட்டும் இல்லையே என கவலையில் உள்ளனர். நாள் முழுவதும் டிரெண்டிங் பொறுமை இழந்த விஜய் ரசிகர்கள் #BeastUpdate என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் நாள் முழுவதும் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். பீஸ்ட் படம் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசாகும் என கூறப்பட்டு வரும் நிலையில், மற்றொரு தகவலாக ஏப்ரல் 28 ல் தான் பீஸ்ட் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். பீஸ்ட் அப்டேட் வெளியிடும் படி சன் பிக்சர்ஸ் மற்றும் நெல்சன் திலீப்குமாரிடம் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். செம அப்டேட்டா இருக்கே இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, விஜய்யின் பீஸ்ட் படத்தின் டப்பிங் வேலைகள் முழுவதுமாக முடிந்து விட்டதாம். மிக விரைவில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வ...

பீஸ்ட் படம் பற்றி வெளியாகும் அடுத்த அதிரடி அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் | Beast update

 Beast First Single Update Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். புத்தாண்டு விருந்தாக இந்த படம் ஏப்ரல் ரிலீஸ் என போஸ்டர் வெளியானது. இதனையடுத்து இந்த பொங்கலுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாக உள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

நடிகை ஜெயலலிதா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா...

  1965ஆம் ஆண்டு சி.வி. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெயலலிதா. இதனை தொடர்ந்து இரண்டாவது படமே எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இப்படத்தின் வெற்றிக்கு பின், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த இவர், 1982ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கினார். சினிமாவின் உச்சத்தில் பல புகழை சந்தித்த ஜெயலலிதா, அரசியலிலும் மக்கள் செல்வாக்கின் மூலம் 5 முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகையாக முதன் முதலில் வாங்கி சம்பளம் ரூ. 3,000 தானாம். பி.ஆர்.பந்துலு இயக்கிய 'சின்னட கொம்பே’ எனும் கன்னட படத்திற்காக ரூ.3,000 ஜெயலலிதாவுக்கு சம்பளமாக வழங்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

வலிமை படத்தின் சென்சார் கட்.. முக்கிய காட்சிகளை நீக்கிய தணிக்கைக்குழு

  அஜித் நடிப்பில் எதிர்பார்ப்புக்குரிய படமாக வலிமை உருவாகியுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13ஆம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் 50% சதவீதம் இருக்கைகளோடு தான் இயங்கும் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து, வலிமை வெளிவருமா என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து இதுவரை எந்தஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், படம் சொன்ன தேதியில் வெளிவரும் என்று சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்நிலையில், வலிமை படத்தில் இருந்து சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் என்னென்ன என்று குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வலிமை படத்திலிருந்து சில கெட்ட வார்த்தைகளையும், வன்முறை சம்மந்தப்பட்ட முக்கிய காட்சி ஒன்றையும் தணிக்கை குழு நீக்கியுள்ளதாம். அதுமட்மின்றி, மிருகங்கள் வரும் காட்சிகளையும், போதை பொருள் பயன்படுத்தும் காட்சியையும் நீக்கியுள்ளார்களாம். மேலும், முக்கியமாக வலிமை படத்தில் இடம்பெற்று இருந்த ' கடவுள் தான் நிஜ சாத்தான்' என்ற வசனத்தையும் தணிக்கைக்குழு மியூட் செய்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர்.